28.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

பொற்கொல்லர்-ஆபரணத் தொழிலை சேவைப் பிரிவில் இருந்து உற்பத்திப் பிரிவிற்கு மாற்ற வேண்டும்-டத்தோ ரசூல் வேண்டுகோள்

🔥 Views : 4
👁 Reading Now : 43

🔊To listen to this news in Tamil, Please select the text.

நக்கீரன், கோலாலம்பூர், செப்.24:
மலேசிய பொற்கொல்லர்-ஆபரணத் தொழிற்சங்கம் உருவாகி, முப்பதாண்டு வரலாற்றை எட்டுகின்ற இவ்வேளையில், தங்க ஆபரணத் தொழிலை சேவைப் பிரிவாக வகைப்படுத்தியுள்ள மத்தியக் கூட்டரசு, இதை மாற்றி உற்பத்திப் பிரிவாக வகைப் படுத்தினால், தங்களின் தொழில் துறை மீட்சிபெற உதவியாக இருக்கும் என்று இந்தச் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹஜி அப்துல் ரசூல் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களை முழுவதும் நம்பி இருக்காமல் உள்நாட்டுத் தொழிலாளர்களையும் இணைத்துக் கொள்ளும்படி அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டாலும் பொற்கொல்லர் தொழிலை மேற்கொள்ள உள்நாட்டினர் முன்வருவதில்லை என்று, இன்று பொற்கொல்லர் சங்கத்தின் 28-ஆவது ஆண்டுக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ரசூல் குறிப்பிட்டார்.

இன்றைய ஆண்டு க் கூட்டத்தில், சங்கத்தின் நிர்வாக க் குழுவிற்கு தேர்தல் நடைபெற்றது.

இதில், ரசூலே மீண்டும் தலைவராகத் தேர்வானார்.

ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக சங்கத்தை செம்மையாக நடத்தி வருவதால்தான் மலேசிய இந்திய பொற்கொல்லர்-தங்க ஆபரணத் தொழிற் சங்கத் தை ச் சேர்ந்த உறுப்பினர்கள் மூன்றில் இரு மடங்குக்கும் மேலான வாக்குகள் பெரும்பான்மையில் தன்னை மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று ரசூல் குறிப்பிட்டார்.

2023-2025 ஈராண்டு தவணைக்கான புதிய நிர்வாகக் குழுவில் சங்கத்தின் துணைத் தலைவராக சண்முகராசு, உதவித் தலைவராக டத்தோ இப்ராகிம், செயலாளராக வீரபாலன், துணைச் செயலராக கீர்த்தி, பொருளாளராக மனோகரன், நிருவாகக் குழு உறுப்பினர்களாக யுவபாலன், டத்தோ அன்வார், முகமட் மொஹிம், புஷ்பநாதன், குகன், தேவகுமார் ஆகியோரும் தேர்வு பெற்றனர்.

கோலாலம்பூர் ஷெரட்டன் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை காலையில் தொழில்முனைவோர்-கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் மாண்புமிகு சரசுவதி கந்தசாமி தொடக்கிவைத்து உரையாற்றினார்.

இந்தபொற்கொல்லர்-ஆபரணத் தொழில் சங்கம் உறுப்பியம் பெற்றுள்ள மலேசிய இந்திய வர்த்தக-தொழில் சங்க சம்மேளனத்தின்(மைக்கி) தலைவர் டத்தோஸ்ரீ ந.கோபாலகிருஷ்ணன், மைக்கியின் உறுப்பினரும் சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் த. சுதந்திரன், செயலாளர் ரா.ராஜசேகரன், துணைச் செயலர் மீனாக்குமார் மற்றும் ஊடகத் துறையினரும் இதில் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles