25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஸ்ரீ முருகன் நிலையத்தின் யாத்திர யோதா ! பொது அறிவு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி!

🔥 Views : 6
👁 Reading Now : 24

🔊To listen to this news in Tamil, Please select the text.

பெட்டாலிங் ஜெயா, ஆக.28-

மாணவர்களுக்கு தொடர்து கூடுதல் கல்வி பயிற்சியை வழங்கிவரும் ஸ்ரீ முருகன் நிலையம் ( SMC) மற்றொரு புதிய கல்வி பயிற்சி திட்டமாக யாத்ரா யோதா எனும் கல்வி சார்ந்த விளையாட்டுகள் வழி பயிற்ச்சிகளை வழங்கிவருகிறது.

கடந்த மாதம் பத்துமலை திருத்தளத்தில் நடைபெற்ற ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யாத்திரையின் தொடர் நிகழ்வாக இந்த யாத்ரா யோதா விளையாட்டு பயிற்ச்சி நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை 26 ஆம் திகதி ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் நடைபெற்ற இந்த விளையாட்டு பயிற்சி நிகழ்வில் தலைநகர் மற்றும் சிலாங்கூர் உட்பட , பிற மாநிலங்களைச் சேர்ந்த SMC மாணவர்கள் சுமார் 150 பேர் பங்கேற்று பயனடைந்தனர். ந்த விளையாட்டு பயிற்சியின் சிறப்பு அம்சமாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் அர்த்தங்கள் மற்றும் அதன் தொடர்பான கேள்விகள் குறித்த கேள்வி பதில் அங்கமாக இந்த விளையாட்டுகள் நடத்தப்பட்டது. பெருமானின் அறுபடை வீடுகளில் ஒவ்வொன்றுக்கும் ஓர் தனி சிறப்பு உண்டு.

அவ்வகையில் அறுபடை வீடுகளில் தனி சிறப்புகள் மற்றும் அதன் கதைகள் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள் தேடுவது, அறுபடை வீடுகளில் வரலாறு அதற்கான விளக்கங்களை தேடுவது போன்ற பல விளையாட்டு அங்கங்களாக இந்த நிகழ்வு நடைபெற்றது. பத்துமலைத் திருத்தளத்தில் நடத்தப்பட்ட கல்வி யாத்திரை மூலம் முருகப்பெருமானே நேரில் வந்து மாணவர்களுக்கு அருள் பாலித்தது போல் நம்பிக்கை கொண்ட ஸ்ரீ முருகன் நிலையத்தின் தோற்றுநர் டான்ஸ்ரீ டத்தோ எம்.தம்பி ராஜா இந்நிகழ்வை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் முருகப்பெருமான் வழங்கிய அருள் மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் யாத்ரா யோதா எனும் விளையாட்டு பயிற்சியை தொடர்ச்சியாக நடத்தியதாக ஸ்ரீ முருகன் நிலையத்தின் இளைஞர் பிரிவு தலைவர் மற்றும் இந்நிகழ்வின் இயக்குனர் அசோக் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள் அறுபடை வீடுகளை பற்றிய பல தகவல்களை தெரிந்து கொள்வதோடு ஒரு புதிய விழிப்புணர்வையும் பெறுவதோடு புரிதல், பிரச்சனைக்கான தீர்வு போன்ற கூடுதல் பயிற்சியை வளர்த்துக் கொள்ள இந்த விளையாட்டு பயிற்சி வழிகாட்டும் என நாங்கள் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இதுவரையில் ஸ்ரீ முருகன் நிலையம் நடத்தி வந்த கல்வி கருத்தரங்கு பயிற்சிகளுக்கு அப்பாற்பட்டதாக இந்த விளையாட்டு பயிற்சி அமைகிறது.

இது முழுக்க முழுக்க மாணவர்கள் விளையாட்டின் மூலம் பொது அறிவை வளர்த்துக் கொண்டு அவர்கள் கல்வியில் பயனடையும் வகையில் ஒரு பயிற்சியாக இது அமைகிறது என அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles