32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

சிறுபான்மை இந்திய சமுதாயத்தை மேலும் பிளவுபடுத்திவாக்குகளை மட்டும் அபகரிக்கப்பார்க்கின்றனர் – -சமூக ஆர்வலர் ‘உங்கள் சகோ’ மணிமாறன் கொந்தளிப்பு

🔊To listen to this news in Tamil, Please select the text.

மஇகா-வும் மக்கள் சக்தி கட்சியும் ஒன்றிணைந்து அரசியல் களம் காணப்போவதாக கடந்த வாரம் செப்டம்பர் 22-ஆம் நாள் கூட்டாக அறிவித்தன.

இப்பொழுது , அடுத்த நான்கு நாட்களில், பெரிக்காத்தான் கூட்டணிக்காக ஓர் இந்தியர் கட்சியை உருவாக்க முன்னெடுப்பு வேலை நடைபெறுவதாக தகவல் கசிந்துள்ளது. மஇகா, ஜசெக, பிகேஆர் கட்சிகளில் இருந்து பிரிந்தவர்களைக் கொண்டு இந்த ஒட்டுக்கட்சியை உருவாக்க பெரிக்காத்தான் தலைமையே ஏற்பாடு செய்வதாகத் தெரிகிறது.

மதானி அரசை வழிநடத்தும் பிரதமர் அன்வாரும் தன்னுடைய தலைமையிலான கூட்டணிக்கு ஓர் இந்தியர் கட்சியை புதிதாக அமைக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது.

அப்படியானால், இதுவரை அவர் பேசிவந்த பல்லினக் கட்சி என்னும் பம்மாத்து என்னவானது?

இந்திய சமுதாயம் ஒற்றுமையாக இருந்தால்தான் பலனை அடைய முடியும் என்ற பிரதமர் உட்பட அனைவரும் இந்திய சமுதாயத்தைக் கூறுபோட்டு வாக்குகளைமட்டும் இலவசமாக அடைய முயன்றால் இந்திய சமுதாயத்தின் எதிர்காலம் என்னாவது?

இதைப்பற்றி இந்தியர்கள் கவனமாக ஆராய வேண்டும். மலாய் சமுதாயம் அரசியல் ரீதியாக எவ்வளவுதான் பிளவுபட்டாலும் அவர்களின் நலனுக்கு எந்தப் பாதிப்பும் எப்போதும் ஏற்படாது. ஆனால், நம்முடைய நிலை எப்போதும் கேள்விக்குறிதான்.

அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு என்னென்ன திட்டங்கள் இடம்பெறும் என்பதை பொறுத்துப் பார்ப்போம் என்று சமூக ஆர்வலர் ‘உங்கள் சகோ’ மணிமாறன் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles