29 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

பாலஸ்தீன மக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்தூதீன் வேண்டுகோள் 

🔊To listen to this news in Tamil, Please select the text.

பாலஸ்தீன மண்ணில் நடைபெற்று வரும்  வன்முறை வெறியாட்டத்தால் பாலஸ்தீன மக்கள் பரிதவித்து வருகின்றனர். காலங்காலமாக சொந்த நாட்டில் அகதிகளாக ஆக்கப்பட்டு இஸ்ரேலிய படையினரால் வஞ்சிக்கப்படும் சூழல் பெரும் வருத்தம் அடைய வைக்கிறது.

மேலும், இரு தரப்புக்கும் இடையில் ஆயிரம் கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது குறித்து மாட்சியமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அல்-முஸ்தஃபா பில்லா ஷா தமது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார். 

பாலஸ்தீன மக்களின் நலனுக்கும் அப்பகுதியில் அமைதி நிலவுவதற்கும் முஸ்லிம்கள் யாவரும் பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி மக்களுக்காக ஹாஜத் தொழுகையில் ஈடுபட்டு பிரார்த்திக்கும்படி மாமன்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்நிலையில், காஸா முனையில் நடைபெற்று வரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதனை அனைத்துலக சமூகம், உலக வல்லாதிக நாடுகள் களமிறங்கி அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

மேலும், வன்முறை ஒடுக்குவதும் மனித உயிர்களை மதிப்பதும் என்ற மலேசியாவின் கொள்கை நிலைப்பாட்டினை முன்னிருத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles