29 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

தேசிய முன்னணியிலிருந்து விலகும் எண்ணத்தைக் கைவிடுங்கள்:  மசீசவுக்கு அம்னோ இளைஞர் பிரிவு வேண்டுகோள் 

🔥 Views : 8
👁 Reading Now : 55

🔊To listen to this news in Tamil, Please select the text.

தேசிய முன்னணியிலிருந்து விலகும் எண்ணத்தைக் கைவிடுங்கள்; தேசிய முன்னணியில் உள்ள உறுப்பு கட்சிகள் அனைத்தும் ஒரு குடும்பமாக செயல்பட்டு வருவதாக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலே மசீசவுக்கு அறிவுறுத்தினார். 

தேசிய முன்னணி உறுப்பு கட்சிகள் அனைத்து நிலைகளிலும் ஒற்றுமையுடன் இருந்து வருகிறது. மேலும், தேசிய முன்னணியில் இருக்கும் உத்வேகம் வேறு எந்த கூட்டணிக்குச் சென்றாலும் மசீசவுக்குக் கிடைக்காது என்று அவர் சொன்னார். 

மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகள் அனைத்தும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக, தேசிய முன்னணி புதிய கூட்டணி ஒன்று அமைக்க நேர்ந்தால் மசீச தனியாக அரசியல் களம் காணும் என்றும் மசீசவுக்கு தேசிய முன்னணி தேவையில்லை என்று  மசீச கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் பேசிய கருத்து தேசிய முன்னணி அரசியல் கூட்டணியிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles