29 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

காஃபிர், ஸியோனிஸ் ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவீர்ப்பீர்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்து

🔥 Views : 7
👁 Reading Now : 33

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாடாளுமன்றத்தில் விவாதத்தின் போது சில தரப்பினர்களை காஃபிர், ஸியோனிஸ் என்று சாடுவதைத் தவீர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களவை சபாநாயகர் டான்ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கேட்டுக்கொண்டார்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க செய்யாமல் இருக்க இந்த நடவடிக்கை அவசியமாகும் என்று டத்தோ ஜொஹாரி அப்துல் கூறினார்.

முன்னதாக, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை காஃபிர் என்று தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சம்பந்தப்பட்ட வார்த்தையானது பெரும் மனவருத்ததை ஏற்படுத்தியதாக கூறி நாடாளுமன்ற மன்றத்திடம் மகஜர் ஒன்று வழங்கப்பட்டதாக அவர் விவரித்தார்.

ஆகவே, அசாதாரண சூழலுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகிக்கொள்வதோடு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கண்ணியத்தோடு நடந்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles