25.3 C
Kuala Lumpur
Thursday, April 16, 2026

Vetri

தாய்க்குலம் வாழ்க! -மலேசிய இந்து சங்கம்

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோலாலம்பூர், மே 12:
தாய்மார் அனைவருக்கும் மலேசிய இந்து சங்கம் அன்னையர் தின வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.

உலகாளும் அன்னை உமையவளின் மறு உருவாக இல்லந்தோறும் இருந்து அன்பின் உறைவிடமாகவும் ஆதரவுப் பெட்டகமாகவும் கருணைக் கடலாகவும் விளங்கும் அன்னையர் யாவும் அன்றாட ஆராதனைக்கு உரியவர்கள்.

அடைக்கும் தாழ் இல்லாத இல்லம் என்னும் உள்ளத்தைத் தன்னகத்தேக் கொண்டிருக்கும் அன்பு தெய்வங்களுக்கு மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் மீண்டும் அன்னையர் தின வாழ்த்தைத் தெரிவிப்பதாக ‘ஸ்ரீகாசி-சங்கபூசன்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles