
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர், ஜூன் 6- இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் நரேந்திர மோடி அவர்களுக்கு ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மலேசியா-இந்தியா இடையிலான தொப்புள் கொடி உறவு தொண்று தொட்டு இருந்து வருகிறது. இந்த உறவை மேலும் வலுப்படுத்துவோம் என்று மீண்டும் இந்தியப் பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி அவர்களுக்கு வழங்கிய வாழ்த்து செய்தியில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவ்வாறு கூறினார்.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் பதவியில் அமரும் உங்களுக்கு மலேசிய இந்தியர்கள் சார்பில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாடு முன்னேறி வருகிறது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலுவவுதை வெளிப்படுத்துவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும் நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மோடி அவர்களின் தலைமையில் இந்தியா மறுமலர்ச்சி பெற்றுள்ளது. இது குறித்து நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை வழிநடத்தி மேலும் மறுமலர்ச்சியை கொண்டு வர இறைவன் அருள் புரியட்டும். இந்திய மக்களின் நலனுக்காக மோடி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
இதில் ரூபாய் நோட்டுக்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு மோடி கொண்டு வந்த இரண்டாயிரம் ரூபாய் பணம் ரத்து கள்ளப்பணத்தை தடுக்க உதவியதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
மலேசியா-இந்தியா ஆகிய இருநாடுகளும் இணைந்து தொப்புள் கொடி உறவை வலுப்படுத்துவதோடு மேலும் பல திட்டங்களை செயல்படுத்த இணைந்து பணியாற்றுவோம் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
