
🔊To listen to this news in Tamil, Please select the text.
இந்தியாவில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தஞ்சமடைந்திருப்பதால் இருதரப்பு உறவுகளில் பாதிப்பு ஏற்படாது என வங்கதேச இடைக்கால அரசு தலைமை ஆலோசகர் முஹம்மது தெளஹித் ஹூசைன்
தெரிவித்தார்.
இந்தியாவுடன் எப்போதும் நல்லுறவில் வங்கதேசம் இருக்க விரும்புகிறது.
இந்தியா, சீனா உள்பட எந்தவொரு நாட்டுடனும் எப்போதும் நல்லுறவை மேம்படுத்தவே வங்கதேசம் விரும்புகிறது.
ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு அழைத்து வருவது குறித்த முடிவுகளை சட்ட அமைச்சகம் எடுக்கும்.
இதுதொடர்பாக சட்ட அமைச்சகம் எங்களிடம் கோரிக்கைகள் வைத்தால் மட்டுமே அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
