
ஸ்ரீ ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம்-இல், புதிய தமிழகத்தின் நிருபர் குமரன் அவர்கள், பக்தர்களுடன் இணைந்து இருமுடி கட்டி ஐயப்பன் ஆலய யாத்திரைக்குப் புறப்பட்டனர்.
இந்த ஆன்மீக நிகழ்வில், பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருமுடி கட்டி, ஐயப்பன் நாமம் முழங்க ஆலயத்திற்குச் சென்றனர். நிகழ்வில் சிறப்பு வருகையாக தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி மாவட்ட தலைவர் சார்லஸ் தம்பதியர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மேலும், குடும்பத்தினரும் உறவினர்களும் கலந்து கொண்டு, பக்தி உணர்வுடன் இந்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு, ஐயப்பன் பக்தர்களிடையே ஆன்மீக ஒற்றுமையையும் பக்தி எழுச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

