
இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாணியில் அபிநயம் செய்து வரும் இளைஞர் அகில், தனது சிறப்பான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
“நானும் பல்வேறு மேடைகளில் ரஜினிகாந்த் போல் அபிநயம் செய்து சாதிக்க வேண்டும். ரசிகர்களின் பாராட்டுகளையும் ஆதரவையும் பெற வேண்டும் என்பதே என் கனவு. தலைவரைப் போலவே, என்னால் முடிந்த அளவு பிறருக்கு உதவிகளை செய்து வர விரும்புகிறேன்,” என்றார்.
மேலும்,
“என்னை பெரிய அளவில் அறிமுகப்படுத்தி, தொடர்ந்து ஊக்கமளித்து வரும் அண்ணன், நடனக் கலைஞர் ராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” எனவும் அவர் கூறினார்.
இந்த இளைஞரின் முயற்சியும் அர்ப்பணிப்பும், இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டினர். தொடர்புகளுக்கு 01128153503
