29.9 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

காயமடைந்த 40 பாலஸ்தீனியர்கள் சிகிச்சைக்காக மலேசியா கொண்டு வரப்படுகின்றனர்

🔥 Views : 13
👁 Reading Now : 26

🔊To listen to this news in Tamil, Please select the text.

இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலில் காயமடைந்த   40 பாலஸ்தீனியர்கள் சிகிச்சைக்காக மலேசியா கொண்டு வரப்படுகின்றனர்.

மலேசியாவுக்கான எகிப்திய தூதர் ராகாய் நாஸர் இதனை உறுதிப்படுத்தினார்.

காசாவில் மோதலின் விளைவாக காயமடைந்த அவர்கள் இன்று இரவு எகிப்தின் அல் மசா விமான தளத்திலிருந்து அரச மலேசிய வான் படைக்கு சொந்தமான இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மூலம் மலேசியாவிற்கு சிகிச்சைக்காக  அழைத்து வரப்படுகின்றனர்.

வெள்ளிக்கிழமை காலை நோயாளிகளுடன் இரண்டு விமானங்கள் மலேசியா வந்தடையும்.

தற்போது எகிப்தில் உள்ள பல மருத்துவமனைகளில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பாலஸ்தீனியர்கள், எலும்பு முறிவுகள், துப்பாக்கி குண்டு காயங்கள், தீக்காயம், பார்வை இழப்பு  உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மலேசியாவுக்கு அழைத்து வரப்படும் அவர்களுக்கு  நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles