
🔊To listen to this news in Tamil, Please select the text.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்கில் 24 மணி நேர ராப்பிட் கேஎல் ரயில், பேருந்து சேவைகள் வழங்கப்படும்.
பிரசரனாவின் தலைவர் முகமத் அசாருடின் மாட் ஷா இதனை கூறினார்.
நாட்டின் 67ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு 11.30 மணி வரை ராப்பிட் கேல் ரயில், பேருந்து சேவைகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்கு இந்த சேவைகளை மக்கள் பெறலாம்.
அதே வேளையில் எம்ஆர்டி புத்ராஜெயா சென்ரலில் இருந்து டத்தாரான் புத்ராஜெயாவுக்கு இலவச பேருந்து சேவைகளும் வழங்கப்படவுள்ளது.
கிட்டத்தட்ட 60 பேருந்துகள் இந்த சேவைக்காக உட்படுத்தப்படும்.
புத்ராஜெயாவில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மக்கள் கலந்து கொள்ளும் நோக்கில் இச் சேவை வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.



