
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசியாவுக்கு நான் தெரிவிக்க விரும்பும் எண்ணற்ற நன்றி கலந்த வார்த்தைகள் உள்ளன. அந்த நன்றிக்குரிய வார்த்தைகளை என்னால் விவரிக்க முடியாது.
மலேசியாவுக்கான பாலஸ்தீன தூதர் வாலிட் அபு அலி இதனை கூறினார்.
இஸ்ரேலிய தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை உதவி வழங்கிய மலேசிய அரசாங்கத்திற்கு நன்றிகள் கோடி.
அதேவேளையில் மலேசியா மக்களுக்கு எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.
காயமடைந்த பாலஸ்தீனியர்களுக்கு மலேசியா சிகிச்சை அளிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தபோது உள்ளபடியே நெகிழ்ந்துவிட்டோம். வெற்று வாக்குறுதியாக இல்லாமல் அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றி உள்ளார்.
அரச மலேசியா வான்படைத் தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
