29 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

ரஷிய பிராந்தியம் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருக்கும்: தலைமைத் தளபதி ஓலெக்ஸாண்டர் சிர்ஸ்கி

🔊To listen to this news in Tamil, Please select the text.

போர் மூலம் கைப்பற்றப்பட்ட ரஷியாவின் கூர்ஸ்க் பிராந்தியம் தொடர்ந்து  தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உக்ரைன் ராணுவ தலைமைத் தளபதி ஓலெக்ஸாண்டர் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷியாவின் கூர்ஸ்க் பிராந்தியத்துக்குள் நுழைந்து உக்ரைன் ராணுவம் கைப்பற்றியுள்ள பகுதிகளில் இருந்து அது இப்போதைக்கு திரும்பாது. அந்தப் பிராந்தியத்தை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உக்ரைனின் வடக்குப் பிராந்தியங்களில் ரஷியா தாக்குதல் நடத்துவதைத் தடுப்பதற்காக, அந்தப் பகுதிகளுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு மண்டலமாக கைப்பற்றப்பட்ட ரஷிய பகுதிகளைப் பயன்படுத்தவிருக்கிறோம் என்றார் அவர்.

ரஷிய – உக்ரைன் போரின் மிகப் பெரிய திருப்புமுனையாக, இந்த நடவடிக்கை கருதப்படுகிறது. இதற்கு தக்க பதிலடி தரப்படும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles