29 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

அபாங் ஜோஹாரிக்கு ஆசியான் சிறப்புமிக்க தலைமைத்துவ விருது வழங்கி கௌரவிப்பு

🔊To listen to this news in Tamil, Please select the text.

சரவாக் பிரீமியர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரிக்கு ஆசியான் சிறப்புமிக்க தலைமைத்துவ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 

நேற்று இரவு நடைபெற்ற  Great ASEAN Entrepreneur Awards 2024 விருந்து நிகழ்ச்சியில் 
கேஎஸ்ஐ வியூக நிறுவனத் தலைவர் Tan Sri Majid Khan, தலைவர்Tan Sri Michael Yeoh ஆகியோர் அபாங் ஜோஹாரிக்கு இவ்விருதை வழங்கினர்.

அபாங் ஜொஹாரியின் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் போற்றுதற்குரியது என்றும் அவர் சிறந்த தலைவர் என்றும் KSI Strategic Institute for Asia Pacific, ASEAN Economic Club-இன் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால் தெரிவித்தார். 

அவரின் அயராத உழைப்பினால் உலகளவில் சரவாக்கின் பெயர் பேசப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த முன்முயற்சிகளில் சரவாக்கை உலகளாவிய ஆற்றல் மாற்ற வரைபடத்தில் நிலைநிறுத்துவது, பசுமை ஹைட்ரஜன் போன்ற பசுமை தொழில்நுட்பம், அத்துடன் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை ஊக்குவிப்பது ஆகியவை அடங்கும்.

இந்த விருதைப் பெறுவதில் மிகவும் பெருமைப்படுவதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல மைல்கற்களை அடைய சரவாக், மலேசியா இணைந்து செயல்பட முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் விருது வென்ற சரவாக் பிரீமியர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி நம்பிக்கை தெரிவித்தார். 

இந்த விருது தனக்கு மட்டும் வழங்கப்பட்டதல்ல. முழு  ஆசியான் பிராந்தியத்திற்கும் இந்த விருதைச் சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles