
🔊To listen to this news in Tamil, Please select the text.
கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஏழு இடங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன.
இன்று மாலை முதல் தொடர்ந்து பெய்த கனமழையைத் தொடர்ந்து தலைநகரைச் சுற்றியுள்ள இந்த இடங்களில் திடீர் வெள்ளம் சூழ்ந்தது.
சிகாம்புட் பாய்பாஸ், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா, ஜாலான் பகாங், ஜாலான் கெந்திங் கிளாங், ஜாலான் டூத்தாமாஸ், ஜாலான் கெப்போங், ஜாலான் கூச்சிங் ஆகியவை அவ்விடங்களாகும்.
குறிப்பாக கனமழையைத் தொடர்ந்து, கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்திற்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் பல வாகனங்கள் நீரில் மூழ்கிய நிலைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வெள்ளத்தால் தலைநகரை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நிலைக் குத்தின.



