31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

ஃபிரான்சாய்ஸ் ஆலோசகர் வாரிய  உறுப்பினராக டத்தோ ஏபி சிவம் நியமனம்!

🔥 Views : 10
👁 Reading Now : 35

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஃபிரான்சாய்ஸ் ஆலோசகர் வாரியத்தின் உறுப்பினராக டத்தோ ஏபி சிவம் நியமிக்கப்பட்டார்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இந்நியமனக் கடிதத்தை அவரிடம் ஒப்படைத்தார்.

அமைச்சின் கீழ் இயங்கும் ஃபிரான்சாய்ஸ் ஆலோசகர் வாரியத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது.

டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக வாரியத்தின் 15 உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

இதில் ஏபி மஞ்சா – புத்ரி குழுமத்தின் தலைவர் டத்தோ ஏபி சிவமும் அடங்குவார்.

நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்ட டத்தோ சிவம், துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இப் புதிய பொறுப்பின் பணிகளை முறையாக மேற்கொள்வேன் என்றும் உறுதியளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles