31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் ஒவ்வோர் ஆண்டும் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் ங்கா கோர் மிங் 

🔥 Views : 7
👁 Reading Now : 50

🔊To listen to this news in Tamil, Please select the text.

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள்  ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.

அரசாங்கத்தின் நிதியை பெறும் ஆலயங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிதிக்கு விண்ணப்பிக்க முடியாது என வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு புதிய நிபந்தனையை கொண்டு வந்தது.

இப் புதிய நிபந்தனைக்கு மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ  சரவணன், மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் உட்பட பலர் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் தகுதியுடைய அனைத்து முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களும் ஆண்டுதோறும் பராமரிப்பு உதவிக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி விண்ணப்பிக்கலாம்.

இதில் அவசரத் தேவைகளின் அடிப்படையில் நிதி உதவிகள்  வழங்கப்படும்.

ஆகையால் முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்கள் வருடந்தோறும்  அமைச்சிற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கு எந்த தடையும் இல்லை என்று அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles