28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

நவம்பர் மாதம் வரை 3,263 இந்திய பெண்கள் அமானா இக்தியாரின் பெண் திட்டத்தின் வாயிலாக பயனடைந்துள்ளனர்: டத்தோஶ்ரீ ரமணன்!

🔥 Views : 7
👁 Reading Now : 45

கடந்த நவம்பர் மாதம் வரை 3,263 இந்திய பெண்கள் அமானா இக்தியாரின் பெண் திட்டத்தின் வாயிலாக பயனடைந்துள்ளனர்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷணன் மக்களவையில் இதனை தெரிவித்தார்.

இந்திய வர்த்தகர்களின் மேம்பாட்டிற்காக அமைச்சின் கீழ் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டங்களின் வாயிலாக இந்திய பெண்களும் பயன் பெற்று வந்துள்ளனர்.

குறிப்பாக அமானா இக்தியாரின் பெண் திட்டத்தின் கீழ் 3,263 இந்திய பெண்கள் பயன் பெற்றுள்ளனர்.

அவர்களுக்காக கிட்டத்தட்ட 30.34 மில்லியன் ரிங்கிட் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

தெக்குன் ஸ்பூபி கோஸ் பிக் திட்டத்தின் வாயிலாக 77 இந்திய பெண்கள் பயனடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 3.1 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

எஸ்எம்இ கோர்ப்பின் ஐ-பேப் திட்டத்தின் கீழ் 20 நிறுவங்களுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் கிராண்ட் வழங்கப்பட்டுள்ளது.

இதில் 6 நிறுவனங்கள் இந்திய பெண் வர்த்தகர்களுக்கு சொந்தமானதாகும்.

இதை தவிர்த்து பேங்க் ரக்யாட்டின் பிரிவ்-ஐ 430 இந்திய வர்த்தகர்கள் பயன் பெற்றுள்ளனர்.

இதில் 145 பேர் இந்திய பெண் வர்த்தகர்களாவர். அவர்களுக்கு 8.14 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்திய பெண் வர்த்தகர்களுக்கான திட்டங்கள் குறித்து செனட்டர் டத்தோஶ்ரீ வேள்பாரி எழுப்பிய கேள்விக்கு டத்தோஶ்ரீ ரமணன் இவ்வாறு பதிலளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles