28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

கால்நடைத் துறையை உள்துறை அமைச்சுக்கு மாற்ற வேண்டும்: டத்தோ சிவக்குமார்

🔥 Views : 9
👁 Reading Now : 33

கால்நடைத் துறை தற்போது விவசாயம், உணவு பாதுகாப்புத் துறை அமைச்சின் கீழ் உள்ளது.

இது உள்துறை அமைச்சுக்கு மாற்ற வேண்டும் என்று டிஎஸ்கே அமைப்பின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்,

பண்டார்பாரு சுங்கைபூலோவில் உள்ள இடைநிலைப்பள்ளியில் நாயும் அதன் 6 குட்டிகளும் அடித்து கொள்ளப்பட்டன.

இச்சம்பவத்தை தொடர்ந்து நாட்டின் விலங்குகளுக்கு எதிராக வன்முறைகளும் கொடுமைகளும் அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில் விலங்குகள் நலச் சட்டம் 2015 (சட்டம் 772), குறிப்பாக 29ஆவது பிரிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்தச் சட்டம் அதிகபட்சமாக  100,000 ரிங்கிட் அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது விலங்குகளைக் கொடுமைப்படுத்திய குற்றவாளிகளுக்கு இரண்டும் தண்டனையாக வழங்குகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக மீண்டும் மீண்டும் நடப்பதால் இந்த சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

தற்போதுள்ள சட்ட அமலாக்கம் இன்னும் பலவீனமாக இருப்பதால் இந்த குற்றவாளிகள் இதுபோன்ற செயல்களைச் செய்யத் துணிகிறார்கள். 

சில நேரங்களில் சமூகம் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தும் நேரங்கள் இருந்தாலும், தீர்க்கமான நடவடிக்கை இன்னும் அரிதாகவே எடுக்கப்படுகிறது.

அதே வேளையில் விவசாயம் உணவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள கால்நடை மருத்துவ சேவைகள் துறையை உள்துறை அமைச்சுக்கு மாற்ற வேண்டும்.

விலங்கு நலச் சட்டங்களுக்கு மக்கள் இணங்குவதை அதிகரிப்பதில் இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles