31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

இந்தியாவின் க்ளோவர் இன்ஃபோடெக் நிறுவனத்துடன் கூட்டமைப்பு; வங்கி உட்பட பல நிறுவங்களில் தொழில்நுட்ப உருமாற்றத்தை கொண்டு வரும்!

🔥 Views : 8
👁 Reading Now : 28

இந்தியாவின் க்ளோவர் இன்ஃபோடெக் நிறுவனத்துடன் கூட்டமைப்பு வங்கி உட்பட பல நிறுவங்களில் தொழில்நுட்ப உருமாற்றத்தை கொண்டு வரும். மலேசியாவின் கேஐஎஸ்எல் நிறுவனத்தின் தலைவர் சண்முக கணேஷ் இதனை கூறினார். கேஐஎஸ்எல் நிறுவனத்தின் கடந்த 24 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப துறையில் ஈடுப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேஐஎஸ்எல் நிறுவனத்தின் வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லாக  இந்தியாவின் க்ளோவர் இன்ஃபோடெக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் குணால் நாகர்த்தி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்திய வங்கித் துறையில் ஓராக்கல் ஏஐ உட்பட பல தொழில்நுட்பங்களை க்ளோவர் இன்ஃபோடெக் நிறுவனம் புகுத்தியுள்ளது.

அத்தொழில் நுட்ப உருமாற்றத்தை மலேசிய வங்கிகளில் கொண்டு வருவது தான் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

வங்கிகளை தவிர்த்து நிதியகங்கள், காப்புறுதி நிறுவங்கள் உட்பட பல்வேறு துறைகளின் இத்தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்யப்ப்படும் என்று சண்முக கணேஷ் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles