
அருள்மிகு காசி விசுவநாதரும் அருள்மிகு அன்னபூரணி அம்மையும் சரவணனின் இறைநேசப் பயணத்தில் நல்லருள் நல்கட்டும்.
இவ்விரு இறைவரையும் வணங்கத்தான், தற்பொழுது காசி இறைநகரில் புனித யாத்திரையை மேற்கொண்டுள்ளார் சரவணன்.
டில்லி கம்பன் கழகத்தின் ‘2024 கம்பன் திருவிழா’வில் கலந்துகொள்வதற்காக நவம்பர் 29-ஆம் நாள் புது டில்லி சென்ற சரவணன், இன்றிரவுதான் தாயகத்திற்கு திரும்புகிறார் என கம்பன் கழகத் தலைவர் கே.வி.கே. பெருமாள் காலையில் தெரிவித்தார்.
அதற்கிடையில் பரம்பொருளாம் சிவனின் தாட்தொட காசியில் சிவநேயப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் இந்த இறைநேசர்.
