
அம்னோவில் பொம்மை போல் செயல்படாமல் இருப்பதற்கு நான் தான் முதன்மை ஆதாரம்.
அம்னோ இளைஞர் அணி தலைவர் டாக்டர் அக்மால் சாலே கூறினார்.
முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் மீண்டும் அம்னோவில் இணைவதற்கு சொந்த நிபந்தனைகளை கூறினார்.
இது தொடர்பில் பேசிய அக்மால் சாலே, அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி கட்சித் தலைவர்களிடையே ஆலோசனைகள் அல்லது கருத்துகளை எப்போதும் வரவேற்பார்.
எனது சில கருத்துக்கள் தலைவருடன் முரண்படுவதாக இருந்தாலும், எனது கருத்தைத் தெரிவிப்பதை நிறுத்துமாறு தலைவர் ஒரு போதும் என்னைக் கேட்டதில்லை.
இது தான் கட்சியில் பொம்மை போல் செயல்படாமல் இருப்பதற்கான முக்கிய ஆதாரம் என்று அவர் கூறினார்.
