31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு கடலுாரில் மத்திய குழு ஆய்வு

🔥 Views : 10
👁 Reading Now : 64

கடலுார், கடலுார் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ள பாதிப்பு பகுதிகளில், உள்துறை அமைச்சக பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகண்டை மற்றும் மேல்பட்டாம்பாக்கத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரை உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்கள் பாதிப்பு, கஸ்டம்ஸ் சாலையில் மண் அரிப்பு, அழகியநத்தம் இரண்டாயிரம் விளாகம் சாலையில் தரைப்பாலம் துண்டிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

அழகியநத்தத்தில் வேளாண் பயிர், வாழை மரங்கள் சேதத்தை பார்வையிட்ட மத்திய குழுவினர், விவசாயிகளிடம் பயிர்சேதம் குறித்து கேட்டறிந்தனர்.

நாணமேட்டில் தென்பெண்ணையாற்று கரை பகுதி உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் மழைவெள்ளம் புகுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது, நிலப்பரப்பில் மணல் குவியல் ஏற்பட்டுள்ளதை பார்வையிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles