31.8 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

மாபெரும் கர்நாடக இசை விழா!

🔥 Views : 10
👁 Reading Now : 55

இசைத்துறையை ஊக்குவிக்கும் வகையில் 2024ஆம் ஆண்டு மலேசிய அனைத்துலக கர்நாடக இசை விழா நடைபெறுகிறது. டிசம்பர் 12 தொடங்கி 14ஆம் தேதி வரையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தென் மற்றும் வட இந்தியா கர்நாடக இசைக்கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். டிசம்பர் 12ஆம் தேதி உள்நாட்டைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர்கள் கர்நாடக மற்றும் இந்துஸ்தானி பாரம்பரிய பாடல்களை வழங்குவார்கள் என்று ஏற்பாட்டுக்குழுவின் இயக்குநர் சுஜித்ரா ஜெயசீலன் தெரிவித்தார்.

டிசம்பர் 13ஆம் தேதி பல்வேறு கலாச்சாரங்களை இணைக்கும் வகையிலான நிகழ்ச்சியில் டிசம்பர் 14ஆம் தேதி இசை வடிவிலான ராகா இராமாயண நிகழ்ச்சியும் இடம்பெறும்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் இத்தகைய நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மலேசியாவுக்கான இந்திய தூதரகம் மற்றும் பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்கு பெரிதும் துணை புரிகின்றன.

கர்நாடக இசைத்துறையில் மிகப்பிரபலமாக விளங்கும் பாடகர்களும் பாடகிகளும் இந்த நிகழ்ச்சியில் பலருக்கு ஆயுட்கால கௌரவ விருதுகளும் வழங்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles