25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

தமிழக அமைச்சர் ராஜா கண்ணப்பனுடன் மலேசிய அரசியல் பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள் சந்திப்பு!

கோலாலம்பூர் ஜன 6-
திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணிக்குழு தலைவர்,
பால் வளத்துறை அமைச்சர் மற்றும் கதர் வாரிய கிராமத் தொழில்துறை அமைச்சர்
மாண்புமிகு ராஜா கண்ணப்பனுடன் மலேசிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்

ராமநாதபுரம் முதுகளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அவர் குறுகிய கால வருகையை மேற்கொண்டு மலேசிய வருகை புரிந்துள்ளார்.

டத்தோ சந்திரசேகர் சுப்பையா தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் , தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ப.சகாதேவன், ம இகா தலைமை செயலாளர் டத்தோ ஆனந்தன், முன்னாள் துணை அமைச்சர் டத்தோ கோகிலன் பிள்ளை, முத்தியாரா குருப் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ஆணிமுத்து, வாரியா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோ மணிவண்ணன்,
தொழில் அதிபர் ஜெ.எஸ்.கண்ணா, பிரிக்பீல்ட்ஸ் சி.சாராதி, கெராக்கான் கட்சியின் சபாநாயகர் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில் அவர் கலந்து சிறப்பித்தார்.

டத்தாரான் மெர்டேக்கா சிலாங்கூர் கிளப் தலைவர் ரிசால் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ் நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று இந்த சந்திப்பில் அமைச்சர் ராஜா கண்ணப்பன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles