25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

டி.எஸ்.கே குழுமம் ஏற்பாட்டில் இலவச தேவாரம், சமயம், பரதம், தவில் நாதஸ்வர வகுப்புகளை டத்தோ கண்ணா சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்!

பத்துமலை, ஜன 11-
டிஎஸ்கே குழுமத்தின் ஏற்பாட்டில் இலவச தேவாரம், சமயம், பரதம், தவில் நாதஸ்வர வகுப்புகளை டிஎஸ்கே குழுமத்தின் தலைவர் டத்தோ கண்ணா சிவகுமார் இன்று அதிகாரப்பூர்வமாக
தொடக்கி வைத்தார்!

பத்துமலை முருகன் திருத்தலத்தில் உள்ள விநாயகர் கோவில் மண்டபத்தில் இன்று காலையில் நடைபெற்ற விழாவில் டத்தோ கண்ணா சிவகுமார் இந்த வகுப்புகளை தொடக்கி வைத்து வாழ்த்தினார்.

நம் நாட்டில் சமயம் மற்றும் கலாச்சார வகுப்பை நமது மாணவர்களுக்கு இலவசமாக கொடுக்கும் முயற்சியில் கடந்த 2022ஆம் ஆண்டு 100 மாணவர்களை கொண்டு தேவார வகுப்பை டத்தோ கண்ணா சிவகுமார் தொடங்கினார்.

அதனை தொடர்ந்து 250 மாணவர்களை கொண்டு மாபெரும் தேவார போட்டியை நாடு தழுவிய அளவில் நடந்தினார்.

அந்த முயற்சி அடுத்தகட்ட நிலைக்கு இப்போது முன்னேறி உள்ளது.

தேவார வகுப்பு, சமய வகுப்பு, பரத வகுப்பு மற்றும் தவில் நாதஸ்வர வகுப்புகளை இலவசமாக நடத்த டி.எஸ்.கே குழுமம் இப்போது மிகப்பெரிய அளவில் முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் இதன் அறிமுக விழா பத்துமலை விநாயகர் ஆலய மண்டபத்தில் இன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த வகுப்புகளில் நமது இந்து மாணவர்கள் கலந்துக்கொள்ள வேண்டும்,

அவர்களை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இலவசமாக நடக்கும் இந்த வகுப்புகளுக்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்து மாணவர்கள் நமது சமய நெறி, பாரம்பரிய கலையௌ கற்க ஆர்வம் கொடுக்க வேண்டும் என டத்தோ கண்ணா தமது உரையில் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles