28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான பொங்கல் பரிசு; செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

🔥 Views : 7
👁 Reading Now : 47

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான பொங்கல் பரிசு வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

மலேசியாவில் உள்ள தமிழர்கள் வரும் செய்யாய்க்கிழமை பொங்கல் விழாவை கொண்டாடவுள்ளனர்.

இவ்வேளையில் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள்.

இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்துடன் இணைந்து, பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மடானி மலேசியா என்ற கொள்கைக்கு ஏற்ப, 

மலேசியர்களாகிய நாம் அனைவரும் நம்மிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்த வேண்டும்.

மேலும் பல்வேறு தடைகள், சவால்களைக் கடந்து வந்த ஒரு தேசமாக, அமைதியான, இணக்கமான முற்போக்கான மலேசியாவை  கட்டியெழுப்ப, மலேசியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக இந்திய சமூகம் ஒன்றுபட வேண்டும். வலுவான ஒருங்கிணைந்த ஒற்றுமை நமக்கு மிகப் பெரிய வெற்றியையும் தரும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த பொங்கல் பரிசாக மிக முக்கியமாக அறிவிப்பை செய்யவுள்ளேன்.

அடுத்த செவ்வாய்க்கிழமை இந்திய சமூகத்திற்கு மற்றொரு நல்ல செய்தியாக இது இருக்கும்.

ஆகையால் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை காத்திருங்கள். நான் அதை அறிவிப்பேன். 

தொழில் முனைவோர் மேம்பாடு  கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட ஏழு முயற்சிகளின்படி, 

நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நம்பிக்கைகளை உறுதி செய்வதில் மடானி அரசாங்கம் மிகவும் உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles