27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

ஸ்ரீ கெம்பங்கானில் வெடிப்புச் சம்பவம் குறித்து எந்தத் தகவலும் இல்லை: மாவட்ட போலிஸ் தலைவர் அன்பழகன்

🔥 Views : 7
👁 Reading Now : 48

ஸ்ரீ கெம்பங்கானில் நடந்ததாக கூறப்படும் வெடிப்புச் சம்பவம் குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று செர்டாங் மாவட்ட போலிஸ் தலைவர் ஏஏ அன்பழகன் கூறினார்.

நேற்று ஸ்ரீ கெம்பங்கனைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் பலத்த வெடிப்பு சத்தத்தை கேட்டதாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பலர் இரவு 8 மணியளவில் ஸ்ரீ கெம்பங்கன் பகுதியில் மிகவும் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு முகநூல் பயனர் தனது வீட்டின் ஜன்னல்கள் நடுங்குவதாகக் கூறி, அந்த சத்தத்தை இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை என்று விவரித்தார்.

என் வீட்டின் ஜன்னல்கள் அதிர்ந்தன. நாம் இதுவரை கேள்விப்பட்டதை விட வலிமையானது. 

ஒரு வெடிகுண்டைப் போல இருந்தது என்று மற்றொரு பயனர் கூறியுள்ளார்.

ஆனால் இந்த சம்பவம் குறித்து இதுவரை தனது துறைக்கு எந்த புகாரும் வரவில்லை.

அதே வேளையில் இந்த சம்பவம் குறித்து போலிசார் உரிய விசாரணைகளை நடத்துவர் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles