
நாட்டில் புதிய குரங்கம்மை நோய் பாதிப்பு பதிவானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 24 வயது இளைஞர் குரங்கம்மை அல்லது எம்பிஓஎக்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறிந்துள்ளது.
நோயாளி ஆபத்தான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக கடந்த 21 நாட்களுக்குள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த வரலாற்றைக் கொண்டிருந்தார்.
ஜனவரி 10ஆம் தேதி சிகிச்சை பெற்ற அந்த நோயாளி, தற்போது நிலையான நிலையில் உள்ளார்.
மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
