27.6 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

MyDigital ID தாமதம், இரண்டாவது 5G அலைக்கற்றல் சிக்கல்கள் ஆகியவைக் குறித்து பிப்ரவரி 12-ஆம் தேதி விவாதிக்கப்படும்: கோபிந்த் சிங் டியோ

🔥 Views : 9
👁 Reading Now : 51

MyDigital ID, இரண்டாவது 5G அலைக்கற்றல் ஆகிய இரு சேவைகளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அடுத்த மாதம் பிப்ரவரி 12-ஆம் தேதி விவாதிக்கப்படு என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். 

பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறும் தேசிய  இலக்கவியல் பொருளாதாரம் மற்றும் நான்காவது தொழில்துறை புரட்சி மன்றக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும்.

இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண இந்தக் கூட்டம் உதவும் என்று அவர் கூறினார்.

இந்த முயற்சியில் ஏற்பட்ட தாமதத்தில் ஒரு சிக்கல் இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். 

தற்போது சிக்கல்களைக் களையும் பணியில் ஈடுப்பட்டு வருவதையும் கோபிந்த் சிங் உறுதிப்படுத்தினார். 

விரைவில் அதைத் தீர்க்க முயற்சிப்போம் என்று நம்புகிறோம் என்றார் அவர்.

முன்னதாக, பிரதமர் அன்வார் இப்ராஹிம் பல உருமாற்றத் திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்களால் ஏமாற்றமடைந்ததாகக் கூறப்பட்டது, அவற்றில் மைடிஜிட்டல் ஐடி செயல்படுத்தல், இரண்டாவது 5ஜி அலைக்கற்றல் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடனான டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் (டிஎன்பி) பேச்சுவார்த்தைகள் ஆகியவை அடங்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles