26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

லிம் குவான் எங் மீது அவதூறு வழக்கு: 1.4 மில்லியன் அபராதத் தொகையை முஹைடின் செலுத்தினார்

🔥 Views : 7
👁 Reading Now : 62

அல்புகாரி அறக்கட்டளையின் வரி விலக்கு நிலை குறித்து லிம் குவான் எங் மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்கின் விளைவாக முன்னாள் பிரதமர் முஹைடின் யாசின் 1.4 மில்லியன் அபராதத் தொகையை செலுத்தினார். 

லிம்மின் வழக்கறிஞர் குவோக் நெக் சியோங், ஜனவரி 27-ஆம் தேதி காலக்கெடுவிற்கு முன்னதாக, மீதமுள்ள 1 மில்லியனை நேற்று லி குவான் எங் கணக்கில் மாற்றியதாக உறுதிப்படுத்தினார். 

முன்னதாக, கடந்த டிசம்பரில் 4 லட்சம் ரிங்கிட் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

டிசம்பர் 16-ஆம் தேதி, நீதிபதி Roz Mawar Rozain  தீர்ப்பை நிபந்தனையுடன் நிறுத்தி வைக்க முஹைதினுக்கு உத்தரவிட்டார். 

தடை உத்தரவின் விதிமுறைகளின் ஒரு பகுதியாக, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அவர் 4 லட்சம் ரிங்கிட் செலுத்த வேண்டும், மீதமுள்ள 1 மில்லியன் ரிங்கிட்டை ஜனவரி 27 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles