33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

மலேசியாவின் மிகப் பெரிய சிவன் ஆலயமாக ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமான் ஆலயம் விளங்கும்!

🔥 Views : 9
👁 Reading Now : 49

மலேசியாவின் மிகப் பெரிய சிவன் ஆலயமாக ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமான் ஆலயம் விளங்கும்.

சக்தி அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை கூறினார்.

கோ போ சாய் எனும் சீன அன்பரின் முயற்சியில் உருவானது தான் ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமான் ஆலயம்.

சிறிய ஆலயமாக இருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

கோ போ சாய் மறைவுக்கு பின் இவ்வாலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது.

தற்போது இவ்வாலயம் முழுமையாக  புதியதாக கட்டப்படவுள்ளது. மிகப் பெரிய செலவில் மிகவும் பிரமாண்டமான முறையில் கட்டப்படவுள்ளது.

9 அடுக்கு ராஜகோபுரம், 5 அடுக்கு கோபுரங்கள் என இவ்வாலயம் கட்டப்படவுள்ளது.

குறிப்பாக கருங்கல்லால் இவ்வாலயம் கட்டப்படவுள்ளது.

ஸ்ரீ கங்காதர சிவ பெருமான் என்ற பெயருக்கு ஏற்ப இந்த ஆலயம் பிறை ஆற்றோரம் அமையவுள்ளது.

இப்படி இவ்வாலயம் மலேசியாவின் மிகப் பெரிய சிவன் ஆலயமாக கட்டப்படவுள்ளது.

பிரமுகர்கள், மக்கள், நல்லுள்ளங்கள் என அனைவரின் மகத்தான ஆதரவுடன் இவ்வாலயம் அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.

சிவப் பெருமான் ஆலயம் கட்டுவது சாதாரண காரியம் அல்ல. அந்த வாய்ப்பு நமக்கெல்லாம் கிடைத்துள்ளது.

இதனால் சிவப் பெருமான் ஆசியுடன்  இவ்வாலயம் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்படும்.

அருள்மிகு ஸ்ரீ கங்காதர சிவ பெருமான் ஆலயமும் சக்தி அறவாரியமும் இணைந்து நடத்திய ஆலயத்தின் மாதிரி வடிவத்தின் அறிமுக விழாவில் டத்தோஸ்ரீ தனேந்திரன் இதனை கூறினார்.

தெ லைட் ஹோட்டல் தலைவர் டான்ஸ்ரீ ரமேஷ், மாநில ஆட்சிக் குழு தலைவர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ, ஜனார் டெக்ஸ்டைல் தலைவர் டத்தோஸ்ரீ அருணாசலம், மாநில மஇகா தலைவர் டத்தோ தினகரன், ஆலயத் தலைவர் சிவக்குமார் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles