25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

வழிக்கு வந்தது பேஸ்புக்; அதிபர் டிரம்ப்புக்கு 22 மில்லியன் நிவாரணம் தர மெட்டா முடிவு

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கிய வழக்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு 22 மில்லியன் டாலர் நிவாரணம் வழங்க மெட்டா முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அப்போது, தோல்வியை தழுவிய டொனால்டு டிரம்ப், அதனை ஏற்க முடியாமல், டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.

மேலும், தனது பேச்சை சமூகவலைதளங்களிலும் பகிர்ந்தார். அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள், ஜோ பைடன் அதிபராக பதவியேற்க இருந்த தலைமை செயலக கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, கோடிக்கணக்கான பாலோயர்களைக் கொண்ட டிரம்ப்பின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா அதிகாரப்பூர்வ கணக்குகள் முடக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தன் மீது அவதூறு சுமத்தி, தன்னுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி விட்டதாக டிரம்ப் வழக்கு தொடர்ந்தார். தற்போது அவர் மீண்டும் அதிபரான நிலையில், இந்த வழக்கில் பணிந்து போக மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles