
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பத்துமலைக்கு சிறப்பு வருகை மேற்கொள்கிறார். பத்துமலை தைப்பூச விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமருக்கு தேவஸ்தானம் அழைப்பு விடுத்தது. அதே வேளையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனும் பிரதமரை சந்தித்து பத்துமலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் குறித்து பேசிருந்தார். இதன் அடிப்படையில் பிரதமர் இன்று பிற்பகல் 3 மணிக்கு பத்துமலைக்கு சிறப்பு வருகை மேற்கொள்ளவுள்ளார். கிட்டத்தட்ட 1 மணி நேரம் அவர் பத்துமலையில் இருப்பார். பத்துமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளையும் அவர் பார்வையிடவுள்ளார். மேலும் பத்துமலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் மேம்பாட்டுத் திட்டங்கள் உட்பட பல கோரிக்கைகள் அவரிடம் தேவஸ்தானம் முன்வைக்கவுள்ளது. பிரதமருடன் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ஆகியோரும் பத்துமலைக்கு வரவுள்ளனர். அதே வேளையில் இகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணனும் வருகின்றனர்.
