
பங்சாரில் புத்தம் புதிதாக ஸ்டையில் ஷைன் அழகு நிறுவனம் திருஅப்புவிழா கண்டது. இந்நிகழ்வில் அதிகமான தொழில் வல்லுனர்களும் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நரேந்திரன் நிர்வாக இயக்குனர் பேசும்போது, இந்த அழகு நிலையம் ரொம்ப நாளா கனவாக இருந்தது. இதற்காக முயற்சி செய்து சிறப்பான முறையில் இன்று திறப்பு விழா கண்டுள்ளது. நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன் என்றால் அதற்கு என் குடும்பம், என் தாயார் என் மனைவி குடும்பத்தினர்கள் தான் முக்கிய காரணம். அதுபோல பல நண்பர்களும் எனக்கு உற்ற துணையாக இருந்து வருகின்றனர். இந்த அழகு நிலையத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. முக அலங்காரம், முடி செய்தல் மற்றும் அனைத்தும் உள்ளது. அதுபோல ஆண்களுக்கு என்று வண்ண வண்ண புது ஆடைகள் எண்ணற்ற டிசைன்கள் குவிந்துள்ளன. பெண்களுக்கான ஆடைகளும் உள்ளன. திறமையான வேலை ஆட்களை கொண்டு முக அலங்காரம் செய்யப்படுகிறது. அனைவரும் வந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார்.
