31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

6.5 மணி நேரம் விசாரணை! இஸ்மாயில் சப்ரியை எம்ஏசிசி மீண்டும் அழைத்தது!

🔥 Views : 7
👁 Reading Now : 42

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தலைமையகத்தில் 6.5 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் மாலை 4.30 மணிக்கு வெளியேறினார்.

பெரா நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி, காலை 9.52 மணிக்கு தலைமையகத்திற்கு வருகை தந்து, வெளியேறும்போது அவரது வாகனத்திலிருந்து கண்ணாடியை இறக்காமல் செய்தியாளர்களிடம் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் சென்றார்.

“விசாரணை இன்னும் முடிவடையவில்லை. முன்னாள் பிரதமரின் மேலும் சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன,” என எம்ஏசிசி வட்டாரம் கூறியது.

நாளை காலை 10 மணிக்கு மீண்டும் எம்ஏசிசி தலைமையகத்திற்கு ஐந்தாவது நாளாக விசாரணைக்கு வருமாறு இஸ்மாயில் சப்ரி அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி, நான்கு முன்னாள் முக்கிய அதிகாரிகள் தொடர்பான ஊழல் மற்றும் பண மோசடி  வழக்கில் சந்தேகநபராக விசாரணை செய்யப்படுகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles