31.2 C
Kuala Lumpur
Thursday, August 20, 2026

Vetri

நோன்பு பெருநாளுக்கு மகிழ்ச்சியான பரிசா? – அரசாங்கம் டோல் கட்டணத்தில் 50% தள்ளுபடி அறிவிப்பு!

🔥 Views : 23
👁 Reading Now : 49

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மலேசிய அரசாங்கம் அனைத்து போக்குவரத்தாளர்களுக்கும் 50% டோல் கட்டணத் தள்ளுபடி வழங்குவதாக பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.

மார்ச் 28 நள்ளிரவு 12.01 மணி முதல், மார்ச் 29 இரவு 11.59 மணி வரை இந்த தள்ளுபடி அமலில் இருக்கும். இதற்காக டோல் நிறுவனங்களுக்கு 19.69 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மடானி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, நாடு முழுவதும் பயணிக்கும் மக்களுக்கு முக்கியமாக நோன்புப் பெருநாள் கொண்டாடும் சமூகத்திற்கு பெரும் நிவாரணமாக அமையும் என கூறப்படுகிறது.

இது மக்களுக்கான உண்மையான உதவியா? அல்லது வரவேற்கப்பட வேண்டிய அரசியல் தீர்வா? என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நிலவுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles