32.3 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

விமான பயண உலகை ஆக்கிரமிக்க ஏர் ஆசியா – 2025ல் 30 புதிய நகரங்களுக்கு சேவை!

🔥 Views : 6
👁 Reading Now : 25

வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும் நோக்கில், ஏர் ஆசியா 2025ஆம் ஆண்டில் 30 புதிய நகரங்களுக்கு தனது விமான சேவையை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.

முழுமையாக மீட்சி பெற்றதைக் தொடர்ந்து, ஆசியான் மற்றும் உள்நாட்டு தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய நகரங்களில் சேவையை தொடங்க ஏர் ஆசியா இலக்காகக் கொண்டுள்ளது.

தற்போது அதிக தேவையுள்ள நாடுகளான இந்தியா, சீனா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் சேவையை விரிவாக்க உலகின் முன்னணி மலிவு கட்டண விமான நிறுவனம் முயற்சிக்கிறது.

2025 இரண்டாம் காலாண்டுக்குள் புதிய நகரங்களுக்கான விமான திட்டங்கள் இறுதியாகும் என்று ஏர் ஆசியா தெரிவித்துள்ளது.

சமீபத்தில், ஆஸ்திரேலியாவின் டார்வின் நகருக்கான விமான சேவையை ஏர் ஆசியா மலேசியா அறிவித்துள்ளது. 27 ஜூன் 2025 முதல், வாரத்திற்கு நான்கு முறை டார்வினுக்கு விமான சேவை மேற்கொள்ளப்படும்.

“2025ஆம் ஆண்டில் ஏர் ஆசியா முழுமையான செயல்பாட்டிற்குத் திரும்பும்” என ஏர் ஆசியா எவியேஷன் குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் உறுதிபடுத்தினார்.

மேலும், 14 புதிய விமானங்கள் வாங்கப்படவுள்ளன என்றும், இவ்வாண்டில் விமானத்தளங்களை மேலும் விரிவாக்க ஏர் ஆசியா திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles