29.6 C
Kuala Lumpur
Monday, June 22, 2026

Vetri

உலக அமைதிக்கான மலேசியாவின் பெரும் பங்கு: HWPL-ன் சரித்திர நிகழ்வு!

🔥 Views : 12
👁 Reading Now : 56

மலேசியா, அமைதிக்காக உலகளவில் பரவியிருக்கும் ஓர் ஒளிவிளக்காக மாறி வருகிறது! அரசு சார்பற்ற அமைப்பான HWPL மலேசியா, பல இன மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தி, ஒரு புதிய உலக அமைதியின் கதவை திறந்து வைத்துள்ளது.

நேற்று முன்தினம் அமைதி மற்றும் போர் கைவிடுதல் பிரகடன நினைவேந்தல் (DPCW) 9ஆம் ஆண்டு விழா, மலேசியாவில் ஒரு வரலாற்று நிகழ்வாக மாறியது. தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, இந்த அமைப்பின் பணி ஒரு அமைதியான, ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட உலகத்தை உருவாக்கும் நீரோடியாக அமைகிறது என்று புகழாரம் சூட்டினார்.

ஒற்றுமை இல்லாமல் அமைதி இல்லை!” என்று அவர் உருக்கமாகக் கூற, விழாவில் 300க்கும் மேற்பட்ட முன்னணி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், அறவாரியங்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

HWPL மலேசியாவின் நிறுவனர் நிங் போங், அமைதிக்கான விழிப்புணர்வை எரியூட்டுவதில் தனது மகிழ்ச்சி, உறுதிப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தினார். “இந்த இயக்கம் உலகம் முழுவதும் அமைதி போராளிகளின் குரலாக மாறும்!” என்ற அவரது உரை, அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்த விழாவில், My Culture அறவாரியம், T-Ratana Lumbini Garden, பிரம்ம குமாரிகள் அறக்கட்டளை, Tailor கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் பலரும் அமைதிக்கான அவர்களின் பங்களிப்பை பகிர்ந்து, ஒரு புதிய ஒற்றுமைக்கான வழியை திறந்துவைத்தனர்.

இந்த நிகழ்வு மலேசியாவின் அமைதிக்கான முயற்சியில் ஒரு புதிய வரலாற்றுப் பக்கத்தை எழுதும் ஒரு பொற்கால மைல்கல்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles