
செய்தி / படங்கள் : எம்.முருகன்
மறக்க முடியாத கொண்டாட்டம்! புகழ்பெற்ற தொழிலதிபர் டத்தோஶ்ரீ ஹரி தம்பதியரின் மகன் சேர்மன் ராஜ் மற்றும் மகள் ஹரிணி அவர்களின் பிறந்த நாள் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இவரது சொந்த மண்டபமான செலயாங் கேப்பிட்டல் மண்டபம் இந்நிகழ்வுக்காக மின்னியது.
இவ்விழாவில் மலேசியாவின் முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் சமூகமிட்டனர். மேலும், சிறப்பு வருகையாளர்களாக மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் உமாராணி உரிமையாளர் டத்தோ ராமலிங்கம் தம்பதியர், பிரபல பின்னணிப் பாடகர் கிரிஸ் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

🎊 டத்தோஶ்ரீ ஹரி தம்பதியர் உருகிய நெஞ்சுடன் கூறியது:
“இவ்விழாவிற்கு வருகை தந்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும், என் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!”
💫 பொலிந்த ஒளி, விருந்தினர்களின் மகிழ்ச்சி, குடும்பத்தின் அன்பு – எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த பிறந்த நாள் விழாவை ஒரு மறக்க முடியாத நிகழ்வாக மாற்றின! 💫

