30.2 C
Kuala Lumpur
Thursday, July 10, 2025

Vetri

வாடிகனில் அதிர்ச்சி! போப் பிரான்சிஸ் காலமானார் – 100 ஆண்டுகளுக்குப் பிறகு விதியை மீறிய புதுமை மரணம்!

கத்தோலிக்க உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார். அவரின் உடல் தற்போது ரோமில் உள்ள ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, போப்புகள் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுவது மரபு. ஆனால், போப் பிரான்சிஸ் மட்டும் அந்த மரபை முற்றிலும் மாற்றியுள்ளார். அவர் விரும்பிய இடம் – சான்டா மரியா மேகியார் பசிலிகா! இது தான் அவரின் தனிப்பட்ட பக்தியும், அதே சமயம் வாடிகனின் centuries-old மரபை புறக்கணிக்கும் தீர்மானமாகவும் பார்க்கப்படுகிறது.

அதிலும் அவர் விரும்பிய சவப்பெட்டி – ஜிங்க்-ஆல் பூசப்பட்ட சாதாரண பெட்டி! மரபு போப்புகள் சைப்ரஸ் மற்றும் ஈயம் மரத்தால் ஆன பேழையில் அடக்கம் செய்யப்படுவதைக் கணக்கில் எடுத்தால், இது ஒரு வெளிப்படையான எதிர்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியில் அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப்பாகும் பிரான்சிஸ். இது திருச்சபை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

இறுதிச் சடங்குக்குப் பிறகு 2–3 வாரங்களில் புதிய போப்பை தேர்ந்தெடுக்கப்படும். 80 வயதிற்குட்பட்ட கார்டினல்கள் மட்டும் சிஸ்டைன் சபையலில் ரகசிய வாக்களிப்பில் பங்கேற்பார்கள். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தவுடன் புதிய போப்பின் பெயர் அறிவிக்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles