34.3 C
Kuala Lumpur
Monday, August 17, 2026

Vetri

🎉 பிரிக்‌பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் சித்திரைத் திருநாள் – தமிழ் புத்தாண்டு கலை விழா!

🔥 Views : 25
👁 Reading Now : 68

தமிழர் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமான சித்திரைத் திருநாள் – தமிழ் புத்தாண்டு விழா, பிரிக்‌பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா பகுதியில் விமர்சன சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

இந்த புத்தாண்டு கலை விழா, வருடாவருடம் நடைபெறும் வழக்கத்தின் தொடர்ச்சியாக, இந்து தர்ம மாமன்றத்தின் தேசிய தலைவர் உயர்திரு. ராதாகிருஷ்ணன் தலைமையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. “சித்திரை மாதம் தமிழர்களுக்கான புத்தாண்டு. இவ்விழா எங்கள் அடையாளம். இதை தொடர்ந்து கொண்டாடுவோம்,” என அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

🎊 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து விழாவை நடத்தின.
இதில்:

  • உறியடித்தல்
  • வர்ணம் தீட்டும் போட்டி
  • உரிமை மேல போட்டி
    போன்ற பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

🧑‍🍳 வாழை இலையில் சமைத்த உணவுடன் அன்னதானம்,
🥗 நவசுவை காய்கறிகள் மற்றும் மரபு சமையல்கள்,
🎶 ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்,
இவை அனைத்தும் பார்வையாளர்களையும், இளைஞர்களையும் பெரிதும் கவர்ந்தன.

🎤 விழாவை சிறப்பித்த முக்கிய பிரமுகர்கள்:

  • டத்தோ லோக பாலா
  • என்.எஸ். ராஜேந்திரன்
  • பிரதமர் துறை சிறப்பு அதிகாரி திரு. சண்முகம் மூக்கன்
    மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரைகள் வழங்கினர்.

இதன் மூலம், மலேசிய தமிழ் சமூகத்தின் பண்பாட்டுப் பிணைப்பு மற்றும் இளைஞர்களின் ஈடுபாடு இன்னும் உறுதி செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles