28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

🌺 பிரிக்பீல்ட்ஸ் பாபா சென்டரில் இருந்து விஷேச ரத ஊர்வலம் – பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

🔥 Views : 7
👁 Reading Now : 37

பிரிக்பீல்ட்ஸ் பாபா சென்டரில் இருந்து புறப்பட்ட ரத ஊர்வலம், பக்தர்களின் பக்தி பரவசம் மற்றும் உற்சாகத்துடன் வீதிவழியாக வெகு சிறப்பாக நடைபெற்றது.

பாபா சென்டர் ஆலோசகர் கண்ணன் தெரிவித்ததாவது:

“வருடா வருடம் இந்த ரத ஊர்வலம் இடையறாது நடைபெற்று வருகிறது. பாபா சென்டர் தலைவர் மற்றும் தொண்டர்கள் அனைவரும் முழு உறுதிப்பாட்டுடன் இதில் பங்கேற்று வருகின்றனர். இது ஒரு ஆன்மிகத் திருவிழாவாக மாறியுள்ளது.”

அதிகாலை பால்குட ஊர்வலத்துடன் நிகழ்வு துவங்கியது. பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தும் வகையில் பால் எடுத்து வணங்கினர்.

அதன் பின்னர், ரத ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நகர்ந்து, பக்தர்கள் பூக்கள் தூவி, மந்திரம் பாடி பஜனை செய்து பாபாவை வழிபட்டனர்.

பாபா சென்டர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டதோடு, நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பக்தியுடன் வழிபட்டனர்.

“வெளிநாடுகளிலும் பாபா சென்டருக்கு மிகுந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் அனைத்து மக்களையும் ஆன்மீக பாதையில் அழைத்துச் செல்லும் நிகழ்வாக மாறியுள்ளது,” என ஆலோசகர் கண்ணன் கூறினார்.

இந்நிகழ்வை சிறப்பிக்க பாபா சென்டர் தொண்டர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் சமூகத் தலைவர்கள் அனைவரும் பங்களிப்பு செய்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles