
ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில், “கல்வி விருத்தம், கல்வி ஜெயம்” என்ற விழா அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இத்திட்டம், மறைந்த ஸ்ரீ தம்பி ராஜா அவர்கள் உருவாக்கிய ஒரு உயரிய கல்வி கொள்கையின் பயனாகும். அனைவருக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த “கல்வி ஜெயம்” திட்டம், பள்ளி மாணவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியதாக இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு கணபதி ராவ் பங்கேற்று, திட்டத்தை அதிகாரபூர்வமாக தொடக்கிவைத்தார். அவர் தனது உரையில்,
“நானும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் ஒரு மாணவனாக இருந்தேன். இன்றும் இங்கு உள்ள மாணவர்கள் படிப்பிலும் பேச்சுத்திறனிலும் முன்னேற்றம் காண்பது பாராட்டத்தக்கது. மாணவர்கள் நம்பிக்கையுடன் படிப்பில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்” என்று உறுதி அளித்தார்.

நிகழ்வில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தைச் சேர்ந்த அரவிந்த் நாயர், இளைஞர் பிரிவைச் சேர்ந்த அசோக் வேலு, பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் என அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

அரவிந்த்சாமி நாயர் கூறுகையில்,
“தம்பி ராஜா அவர்கள் மறைந்தாலும், அவருடைய இலட்சியம் நம்மோடு வாழ்கிறது. கல்விக்காக உழைத்தவர், எப்போதும் நம் நெஞ்சில் இருப்பார். அவரை நினைத்து இறைவனை நினைத்து பயிலுங்கள்; வெற்றி நிச்சயம்!”
என்றார்.

