33.1 C
Kuala Lumpur
Thursday, October 8, 2026

Vetri

பாடாத பாட்டெல்லாம் இசை நிகழ்ச்சிக்கு தமிழக கலைஞர்கள் வருகை!

🔥 Views : 24
👁 Reading Now : 63

மலேசிய மற்றும் தமிழக கலைஞர்கள் இணைந்து, புகழ்பெற்ற திரைப்படங்களின் பழைய இனிய பாடல்களை இசையுடன் பரிமாறும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஆகஸ்ட் 23ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு பத்துமலை செங்கா கான்வென்ஷன் ஹாலில் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு விஜய் டிவி புகழ் மூக்குத்தி முருகன், பின்னணி பாடகி ஜெய் ஸ்ரீ, பாடகி ரஜிதா, பாடகர் முகேஷ், டிவனேஷ் உள்ளிட்டோர் மலேசியாவிற்கு இன்று வருகை தந்தனர். அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் மலேசிய கலைஞர் கிருஷ்ணன், நிகழ்ச்சியை நடத்தும் விஷால் நிறுவன உரிமையாளர் விஹஸ்ஸல் மற்றும் பல கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

தற்போது டிக்கெட்டுகள் இணையதளம் வழியாக பரபரப்பாக விற்பனையில் உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியை விஷால் நிறுவனம் சிறப்பாக ஒருங்கிணைத்து வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles