25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

பாலஸ்தீனத்தில் அமைதி நிலைநாட்டப்படும் வரை இஸ்லாமிய நாடுகள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் – வெளியுறவு அமைச்சர்!

🔥 Views : 6
👁 Reading Now : 36

பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் நீதி நிலைநாட்டப்படும் வரை, இஸ்லாமிய நாடுகள் தொடர்ந்து தங்கள் குரலை எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன் வலியுறுத்தினார்.

இஸ்ரேலின் தற்போதைய காசா இராணுவ ஆக்கிரமிப்பு, பாலஸ்தீன நிலத்தை நிரந்தரமாக கைப்பற்றும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் அனைத்து இராஜதந்திர முயற்சிகளையும் அவமதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் பொதுமக்களை கொன்று, பட்டினியால் வாட வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதைத் தேவையான தற்காப்பு எனக் கூறி அதன் கூட்டாளிகளின் ஆதரவைப் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேல் தொடர்ந்து நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும் நிலையில், உலகம் முழுவதும் அதன் விமர்சகர்களை மிரட்டும் சூழலும் உருவாகி வருவதாக டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன் எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles