
புத்தாடைகளில் புகழ் பெற்ற மஹாராஜா டெக்ஸ்டைல்ஸ் (Maharaja Textiles) தனது எட்டாவது கிளையை பிரிக்பீல்ட்ஸில் திறந்து வைத்தது. இந்நிகழ்விற்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டு, புதிய கிளையினை திறந்து வைத்தார்.

புதிய கிளையில்:
- தீபாவளி சிறப்பு சேலைகள் வண்ண வண்ண டிசைன்களில்,
- ஆண்களுக்கான சட்டைகள், பட்டு வேஷ்டிகள்,
- பெண்களுக்கான காஞ்சிபுரம் பட்டு சேலைகள் உட்பட பல வகையான ஆடைகள் குவிந்துள்ளன.

மேலும் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
“எங்களின் புதிய கிளைக்கு அனைவரும் வருகை தந்து ஆதரவு அளித்து, தரமான புத்தாடைகளை சிறந்த விலையில் பெற்றுக்கொள்ளுங்கள்” என உரிமையாளர் டத்தோ ராஜசேகரன் கேட்டுக்கொண்டார்.

