25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

🙏 டமான்சாரா காயூ ஆரா கொல்லிமலை மாசி பெரியண்ணன் சுவாமி கோவில் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

🔥 Views : 7
👁 Reading Now : 24

டமான்சாரா காயூ ஆரா கொல்லிமலை மாசி பெரியண்ணன் சுவாமி கோவில் வருடாந்திர திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த ஆண்டுகளைப் போல இவ்வாண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து ஆன்மீக மகிழ்வை அனுபவித்தனர்.

அண்ணன் மாலை முனி, செல்லம், ராஜேந்திரன் சகோதரர்கள் தலைமையில் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது.

காலையில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள், பின்னர் பிற்பகலில் நடைபெற்ற மகேஸ்வர பூஜை, அதனைத் தொடர்ந்து சுவையான அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்விற்கு புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பகிஹியா மனோ பரமசிவம், டாக்டர் ரவி பரமசிவம் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு பக்தர்கள் பெரும் அளவில் கலந்துகொண்டது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என அண்ணன் மாலை முனி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles